சரிகிறது இன்சூரன்ஸ் கோட்டை!

கடந்த ஆண்டு இருபத்து நான்கு காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் தொகை வசூல் இருபத்தைந்தாயிரம் கோடியாக இருந்தது. அதே நிறுவனங்களின் இந்த ஆண்டு பிரிமியம் வசூல் இருபத்தி  நாலாயிரத்து முந்நூற்று எண்பது கோடியாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) பதிநான்காயிரத்து முந்நூற்று நாற்பத்தைந்து  கோடி வசூலித்துள்ளது. இது மொத்த வசூலில் ஐம்பத்தெட்டு சதவீதம். சென்ற வருட பிரிமிய வசூலை ஒப்பிடும்போது இவ்வருடம் சுமார் பதினைந்து சதவீத சரிவு நிகழ்ந்துள்ளது என்கிறது இந்திய  காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் அறிக்கை. அதே சமயம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வசூல் முன்னை காட்டிலும் அதிமாகியிருக்கிறதாம். இதில், பஜாஜ்  அலையன்ஸ் அதிகபட்சமாக அறுபத்தெட்டு சதவீதம் வளர்ந்திருக்கிறதாம். ஆதித்ய பிர்லா சன் லைப் அறுபத்தொரு சதவீதமும் ஐசிஐசிஐ முப்பத்திரண்டு சதவீதமும், ஹெச்டிஎஃப்சி இருபத்தேழு  சதவீதமும் மேக்ஸ் லைஃப் இருபத்தொரு சதவீதமும் வளர்ந்திருக்கிறதாம். காப்பீட்டுத் திட்டங்கள் அரசு நிறுவனத்திடமிருந்து தனியார் நிறுவனங்களை நோக்கி நகர்வதை இந்தப் போக்கு உணர்த்துகிறது.

Related Stories:

>