×

ஃபார்வேர்ட் பண்ணுங்க பாஸ்!

வாட்ஸப் நம் தகவல்களை எடுக்கப் போகிறது என்கிற அமளிதுமளி ஒருவழியாக ஓய்ந்திருக்கிறது. பொழுதுபோக்கவும், தகவல் பரிமாற்றத்துக்கும் நாம் பயன்படுத்தும் வாட்ஸப், சில நேரங்களில் நம்மை  விபரீதத்துக்குள்ளும் தள்ளிவிடலாம். டூவீலர் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டுக்கொள்வதைப் போல எந்தவொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போதும் முன்னெச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.  அவ்வகையில் வாட்ஸப் பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட டிப்ஸ் உதவும்.

=வங்கிக் கணக்கு விவரம் மாதிரியான முக்கியத் தகவல்களை வாட்ஸப்பில் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாதீர்கள். நெருங்கிய நண்பர்களுக்கோ, உறவினருக்கோ அதை தெரியப்படுத்த வேண்டும்  என்றாலும் கூட தொலைபேசிப் பேச்சில் கூட சொல்லலாமே தவிர வாட்ஸப்பில் மெசேஜாக அனுப்புவது பாதுகாப்பற்றது.

=முகமறியா ஆட்கள் பகிர்ந்துகொள்ளும் எந்த ஃபைலையும் உடனடியாக ஓபன் செய்துவிடாதீர்கள். அதில் வைரஸ் இருக்கலாம். அதன் மூலம் உங்கள் போனில் இருக்கும் விவரங்களை யாரோ ஒருவர்
சுலபமாக ‘ஆட்டை’ போட முடியும்.

=இந்த மெசேஜை பத்து பேருக்கு ஃபார்வேட் செய்யுங்கள் கணக்காக வரும் ‘செயின் மெசேஜ்’களை புறக்கணியுங்கள். ஆதாம் ஏவாள் காலத்து செயின் மெசேஜ்களே கூட இன்னமும் சுற்றிக்  கொண்டிருக்கின்றன. இணையவெளியில் கொட்டப்படும் தேவையற்ற குப்பை இந்த செயின் மெசேஜ்கள்.

=இரத்தம் தேவை மற்றும் பல்வேறு உதவிகள் கோரி வரும் மெசேஜ்களை கண்ணை மூடிக்கொண்டு அப்படியே ஃபார்வேட் செய்து விட்டு, நம் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாதீர்கள். உங்களால்  உண்மையிலேயே உதவமுடியும் என்றால் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு போன் செய்து, நிஜமாகவே உதவி தேவையா என்று அறிந்துக்கொண்டு ஏதேனும் செய்ய முயலுங்கள்.

=தொடர்பில் இல்லாத தெரியாத எண்ணிலிருந்து வரும் மெசேஜ்களை கண்டுகொள்ளாதீர்கள். அவ்வாறு வருபவற்றுக்கு பதில் அளிக்காமல் டெலிட் செய்துவிடுவது நல்லது. அந்நியர்கள் உங்களை  ஏதேனும் வம்பில் மாட்டிவிட வாய்ப்பிருக்கிறது.

=வாட்ஸப் யாருக்கும் எந்த மெசேஜும் அனுப்புவதில்லை. எனவே வாட்ஸப்பின் பெயரில் வரும் எதையும் நம்பாதீர்கள்.

=ஆட்டோமேடிக் டவுன்லோடு ஆப்ஷனை டிஸேபிள் செய்து வைத்துவிடுங்கள். தேவையில்லா வீடியோ, படங்கள் உங்கள் மொபைலின் நினைவகத்தை அடைக்கும்.

=ஃப்ரீயாக எங்கேயாவது wifi கிடைக்கிறதே என்று, வாட்ஸப்பில் வெத்தாக மொக்கை போடாதீர்கள். அங்கிருக்கும் யாரேனும் ஒரு ‘நல்ல’ உள்ளம், sniffer network மூலமாக உங்கள் வாட்ஸப் பரிமாற்றங்களை அப்படியே அள்ளிக்கொள்ள முடியும்.

Tags : வாட்ஸப்
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...