மயானத்திற்கு பாதை வசதியில்லாததால் ஊருணி வழியே உடலை சுமந்து செல்லும் அவலம்

கீழக்கரை : கீழக்கரை அருகே மயானத்திற்கு செல்ல பாதை வசதியில்லாததால், ஊருணி வழியாக தண்ணீருக்குள் இறங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பெரியபட்டினம் அருகே தெற்கு புதுக்குடியிருப்பு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு சுடுகாட்டான்பட்டி மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சமீபத்தில் பெய்த மழையால் மயான பாதையில் தற்போது 6 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கப்பலாற்று ஊருணி வழியாக தண்ணீருக்குள் இறங்கி, இறந்தவர்களின் உடலை சுமந்து சென்று இறுதி சடங்கு செய்யும் அவல நிலை உள்ளது. தெற்கு புதுக்குடியிருப்பில் நேற்று ஒருவர் இறந்த நிலையில், இறுதி சடங்கு செய்ய அவரது உடலை ஊருணி தண்ணீருக்குள் கஷ்டப்பட்டு தூக்கி சென்றனர். இதனால் பாதை வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: