பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு: ஓபிஎஸ் எதிர்பார்ப்பு

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு வரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் அதிமுக அரசுதான். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>