தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நாளை சோதனை அசல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்: மீனவர்களுக்கு வேண்டுகோள்

சென்னை: இந்திய கடற்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கு பாதுகாப்பை பலப்படுத்திடவும், இந்திய கடலோர காவல் படையினரால் நாளை தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அப்போது, மீனவர்கள் அசல் அடையாள அட்டைகள், படகுகள் தொடர்பான ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது. வரும் 25ம் தேதி மீனவர்கள் விழிப்புடன் இருந்து சந்தேகத்திற்கு இடமான நபர்கள், அன்னியர்கள், படகுகளின் நடமாட்டம் குறித்து கடலோர பாதுகாப்பு படையினராலும், கடலோர பாதுகாப்பு குழுமத்தாலும் மீன்பிடி விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் சோதனையிடப்படும் என்பதால் அசல் அடையாள அட்டைகள் மற்றும் படகுகள் தொடர்பான ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும். மேலும் மீன்பிடி படகு, நாட்டுப்படகுகளில் பொருத்தப்பட்டுள்ள தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மீன்வளத்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: