வேப்பூர் அரசு கல்லூரி முதல்வரை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்ணா

பெரம்பலூர்:வேப் பூர் அரசுக் கல்லூரி முதல்வரைகண்டித்தும், முதல்வரை மாற்றக் கோரி யும் கவுரவ விரிவுரையா ளர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீ சாரின் சமரசப் பேச்சு வார் த்தையில் முதல்வர் சமரச மாகாததால் மாலைவரை போராட்டம் நீடித்தது.பெரம்பலூர் மாவட்டம் வேப் பூர் கிராமத்தில் அரசு மக ளிர் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி இயங்கி வரு கிறது. பல்க லைக்கழக கவுரவ விரிவு ரையாளர்கள் 50க்கும் மேற் பட்டோர் இங்குப் பணிபுரிந் து வருகின்றனர்.இதில் இ ளங்கலை மற்றும் முதுக லைப் பாட பிரிவுகளில் 1500க்கும் மேற்பட்ட மாண விகள் பயின்று வருகின்ற னர்.10க்கும் மேற்பட்ட பணி யாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கல்லூரியில் மீனா என்ப வர் பொறுப்பு முதல்வராக உள்ளார். இக் கல்லூரிக் கட்டிடம் வேப்பூர் மெயின் ரோட்டிலிருந்து சுமார்அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளே கட்டப்பட்டுள்ளது. இதனால் மெயின்கேட்டில் இருந்து விரிவுரையாளர் கள், பணியாளர்கள் அனை வரும் கல்லூரிக்கு தங்கள் டூ-வீலர்களில்செல்வது வழ க்கம். அதோடு முழுமையா ன பஸ் வசதி இல்லாதக் கல்லூரிக்கு சென்று வரும் மாணவிகள்,பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் மி குந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். , தாமதமாக கல்லூரிக்கு வருவோரை கேட்டுக்குள் நுழைய விடாதபடிக்கு 10 மணி ஆனவுடன் மூடிவை க்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத னால் பள்ளி மாணவிக ளைப்போல கல்லூரி மா ணவிகள் கேட்டுக்கு வெளி யே காத்துக்கிடப்பது மட்டு மன்றி விரிவுரையாளர்க ளும் வெளியே நிற்கும் அவ லம் அரங்கேறி வந்தது. மே லும் தாமதமாக வந்தால் தண்டனையாக ஆப்சென்ட் போட்டு தன்னாட்சிக் கல் லூரி போல் செயல்பட்டுள்ளது.குறிப்பிடதக்கது. இதனால் பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மற் றும் பேராசிரியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலைமுதலே திடீ ரென கல்லூரிமெயின்கேட் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அப்போது கல்லூ ரிக்கு காலதாமதமாக 11 மணிக்குமேல் வந்த (பொ) முதல்வர் மீனா தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரையும் அழைத்துப் பேச வில்லை. இதுகுறித்துத் தகவலறிந்த குன்னம் போ லீசார் விரைந்து வந்து தர் ணாவில் ஈடுபட்ட பேராசிரி யர்கள், விரிவுரையாளர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். பிறகு முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்திய தில்,முதல்வர் மீனா சமரசம் ஆகவில்லை. இதனால் பே ச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை தொடர்ந்து பேராசிரியர்கள் தொடர்ந்து மாலைவரை தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டு வந்த னர். இதனால் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறவில்லை.

Related Stories: