சாலை பாதுகாப்பு மாதம் எமன் வேடம் அணிந்து நூதன விழிப்புணர்வு பிரசாரம்

குன்றத்தூர்: குன்றத்தூரில் பகுதியில் வாகன விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எமன் வேடம் அணிந்து நூதன விழிப்புணர்வு பிரசாரம்  செய்தனர். தமிழகத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, வாகன  ஓட்டிகள் விபத்தில்லாமல் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என வழியுறுத்தப்படுகிறது. இதையொட்டி, குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் இணைந்து அரசு பஸ்  டிரைவர்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் ஹெல்மெட் அணிவதன் அவசியம், வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கார், வேன்களை ஓட்டும்போது டிரைவர்கள் சீட் பெல்ட் முறையாக அணிய  வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எமதர்ம ராஜா, சித்திரகுப்தன் வேடம் அணிந்து, தங்கள் கைகளில் பாசக்கயிற்றை வைத்து கொண்டு, விதிமுறைகளை மீறி செல்பவர்களை மடக்கியும், துண்டு  பிரசுரங்கள் கொடுத்தும், அவர்கள் கழுத்தில் பாசக்கயிற்றை போட்டு இழுப்பது போன்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களுடன், சங்கு ஊதியும், விதிமுறைகளை மதித்து செல்லும் வாகன ஓட்டிகளை மடக்கி அவர்களுக்கு இனிப்பு  வழங்கியும் வாழ்த்து கூறினர். இதில் எமதர்மனே வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்வது போன்று பிரசாரம் செய்தனர்.

Related Stories: