காஞ்சி பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் கைவினைஞர் பயிற்சி மையம் தொடக்க விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காரைப்பேட்டையில் அமைந்துள்ள பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில், போஷ் தனியார் நிறுவனத்தில் கைவினைஞர் பயிற்சி மைய தொடக்க விழா நடந்தது.  பக்தவச்சலம் கல்வி அறக்கட்டளைத் தலைவர்  மயூர்வாமனன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்றார். போஷ் நிறுவன தலைமை பொது மேலாளர் அரவிந்த் மையா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கைவினைஞர் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.  இந்த பயிற்சி மையத்தின் மூலம் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள், எளிதில் பணிக்கு சென்று தங்கள் வாழ்க்கையை வளமாக்கி கொள்ள முடியும் என அப்போது தெரிவித்தார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர்  சிவக்குமார் நன்றி கூறினார்.

Related Stories:

>