தங்கம் சவரனுக்கு ரூ.192 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ.192 அதிகரித்தது. தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,651க்கும், சவரன் ரூ.37,208க்கும் விற்கப்பட்டது.இந்நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,691க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,528க்கும் விற்கப்பட்டது. மாலையில், தங்கம் விலை சற்று குறைந்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,675க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,400க்கும் விற்கப்பட்டது.

Related Stories:

>