நீர் ஆதாரம் குறைவதை தடுக்க நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு நிபுணர் குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் சுரேந்திரநாத் கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், ‘2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் நேரடியாக கடலுக்குச் சென்று வீணாக கடலில் கலக்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தை  உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர் வளத்தை செறிவூட்ட 4 வாரங்களில் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: