கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை!: பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை..!!

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று முதல் தமிழகத்தில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகின்றது. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். வகுப்புகளில் 25 மாணவர்களுக்கு மிகாமல் மாணவர்கள் அமரவைக்கப்பட வேண்டும். போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மல்டி விட்டமின், ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து, வாரம் ஒருமுறை அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தொற்றினை முன்னரே கண்டறியும் வகையில் பள்ளிகளுக்கு வரக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோய் பரவலை முன்கூட்டியே கண்டறிந்து பள்ளி வளாகங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் தற்போது முடித்துவிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் நேரடி கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகின்றது.

Related Stories:

>