×

சபரிமலையில் ரூ.300 கோடிக்கு பதில் ரூ.20 கோடி மட்டுமே வசூல்

திருவனந்தபுரம்: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக கடந்த டிசம்பர் 30ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. இன்று காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படுகிறது. நேற்று முன்தினத்துடன் நெய்யபிஷேகம் நிறைவடைந்து. நேற்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் நடை சார்த்தப்பட்டால் மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி நடை திறக்கப்படும். சபரிமலையில் வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலத்தில் ரூ.300 கோடிவரை வசூலாகும். ஆனால், இந்த ஆண்டு பக்தர்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளால் ரூ.20 கோடிக்கு கீழ் மட்டுமே வசூலாகியுள்ளது.

Tags : Sabarimala , In Sabarimala, only Rs 20 crore was collected instead of Rs 300 crore
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு