ஸ்மார்ட் கடைகள் தேர்வு செய்ய நாளை குலுக்கல்

சென்னை: மெரினா கடற்கரையில் 900 கடைகள் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கான விண்ணப்பம் விநியோகம் 26ம் தேதி வரை நடந்தது. இதில் ‘அ’ பிரிவில் 1,348 விண்ணப்பங்களும், ‘ஆ’ பிரிவில் 12,974 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி அரங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் 20ம் தேதி (நாளை) முதல் குலுக்கல் நடக்கிறது.  20ம் தேதி ‘அ’ பிரிவினருக்கும், 21ம் தேதி ‘ஆ’ வகை பிரிவினருக்கும் கடை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த ஒதுக்கீடு கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை மாநகராட்சி ஆணைர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>