குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தென்காசி: குற்றால அருவிகளில் 4 நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதியளிக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம் அருவி படிக்கட்டுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுந்தது. வெள்ளப்பெருக்கை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இதனிடையே குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு வரும் இன்று 17ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தென்காசி கலெக்டர் சமீரன் அறிவித்திருந்தார். ஆனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்ததையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்தது. இதைத் தொடர்ந்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து இன்று முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவிகளில் நீராடி மகிழ்ந்தனர்.

Related Stories: