காணும் பொங்கலையொட்டி குரங்கு அருவி, ஆழியார் அணைக்கு ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் வருகை

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவி மற்றும் ஆழியாரில், நேற்று காணும் பொங்கலையொடடி சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். ஒரே நாளில் சுமார் 8 ஆயிரம் பேர் வந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, பூங்கா ஆகியவற்றிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி முதல், கொரோனா ஊரடங்கு காரணமாக  தொடர்ந்த 8மாதமாக ஆழியார் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த  மாதம் துவக்கத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.  

 இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, கடந்த இரண்டு  நாட்களாக ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தனர். நேற்று காணும் பொங்கலையொட்டி, ஆழியார் அணை பகுதிக்கு, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகளவில் வந்திருந்தனர். பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து, ஆழியார் பூங்காவில் வெகுநேரம் பொழுதை கழித்தனர்.  அங்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஆழியார் அணைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால், ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சந்தேகப்படும்படியானவர்களை போலீசர் விசாரித்து அனுப்பினர். பல மாதத்திற்கு பிறகு, சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது. ஆழியார் அணைப்பகுதிக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.  அதேபோல், சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்களும் ஆழியார்  அருகே உள்ள குரங்கு அருவிக்கும் ஆர்வமுடன் சென்றனர். இதில் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்தக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். பயணிகள்

Related Stories:

>