500 தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு செங்கொடி சங்கம் வக்கீல் நோட்டீஸ்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளது. இவற்றில் உள்ள 11 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி தனியாருக்கு அளிக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள நிரந்தர பணியாளர்கள், மாநகராட்சி வசம் உள்ள மண்டலங்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த மண்டலங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதன்படி மற்ற மண்டலங்களில் உள்ள நிரந்தர பணியாளர்கள் அண்ணாநகர் மண்டலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் 500 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர், பல்வேறு போராட்டங்ளை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் ”எம்யூஎல்எம் தொழிலாளர்களை நிரந்தம் செய்வது மற்றும் குறைந்தபட்ச கூலி அளிப்பது தொடர்பாக பல மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி இவர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது இயற்கை நீதி கேட்பாடுகளுக்கு எதிரானது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு செங்கொடி சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: