சென்னையில் மார்ச் 13ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை

சென்னை: சென்னையில் மார்ச் 13ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த சில மாதங்களாக மாஞ்சா நூல் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாஞ்சா நூல் மூலம் விடப்படும் பட்டம் பலரது உயிரை பறித்ததோடு பலத்த காயத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம் விட சென்னையில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தடை ஜனவரி 13ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை மேலும் 60 நாட்கள் நீட்டித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாஞ்சா நூல் பட்டம் விடுவது, விற்பனை செய்வது, இருப்பு வைப்பது, இறக்குமதி செய்வது குற்றமாகும். தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>