நலிவடைந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படுமா?

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு  ஆணையம் கடந்த 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் மூலம் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, விளையாட்டு  ஆணையம் ₹3 ஆயிரமாக ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தொகை பெற,  தேசிய அளவில் சாதனை படைத்து நலிந்த நிலையில் உள்ள தலைசிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு 58 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். அவர்களுடைய மாத வருமானம் ₹6,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.  இத்திட்டத்தின்கீழ், 101 முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் 11 குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஓய்வூதிய தொகை உயர்த்தப்படாமல் உள்ளதாக விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழக அரசு விலைவாசிக்கு ஏற்ற வகையில் நலிந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்தி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: