தமிழக தேர்தலுக்கு ரூ.621 கோடி வேண்டும்: அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

சென்னை: சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்துவதற்கு தமிழக அரசிடம் செலவு தொகையாக ரூ.621 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்த செலவு தொகையாக 621 கோடி ரூபாய் நிதி தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும், தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தேர்தல் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.தமிழகத்தில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்தும், கொரோனா பரவல் காலத்தில் தேர்தல் நடத்தும் போது பின்பற்ற வேண்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் குறித்தும் நேற்று முன்தினம் துறை சார்ந்த செயலாளர்களுடன் முதற்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட ஆலோசனை விரைவில் நடத்தப்படும். தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திட்டமிட்டப்படி வருகிற 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories: