மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது : இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

சென்னை : நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சென்னையில் அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மாஸ்டர் படம் இன்று வெளியானது.கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் படம் பார்த்தனர்.இசையமைப்பாளர் அனிருத், நடிகை மாளவிகா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மகேந்திரன் ஆகியோரும் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். பின்னர் பேசிய லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும் திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், சானிடைசர் பயன்படுத்தவும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: