தடயவியல் துறை ஆய்வில் நீட் மோசடி மாணவியின் லேப்டாப், செல்போன்

சென்னை: மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் தேர்வு மதிப்பெண்கள் கொடுத்த வழக்கில் மாணவி தீக்‌ஷா பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க நீட் மதிப்பெண், கலந்தாய்வு கடிதம் அளித்து மோசடி செய்ததாக ராமநாதபுரம் பரமக்குடி மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டாக்டர் பாலசந்திரன் 1ம் தேதி கைதானார்.

மோசடிக்கு மூளையாக இருந்த ஜெயராமனை ேபாலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மாணவி தீக்‌ஷா பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை பல் டாக்டர் பாலசந்திரனை பரமக்குடிக்கு அழைத்து சென்று போலீசார் அவரது வீட்டில் பறிமுதல் செய்தனர். போலி நீட் தேர்வு மதிப்பெண் சான்று தயாரித்ததாக கூறப்படும் லேப்டாப்பை தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: