முத்தியால்பேட்டை - ராஜகுலம் புறவழிச்சாலையில் தடுப்புகள் இல்லாத தரைப்பாலத்தால் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள் : பெரும் விபத்துக்குமுன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த  முத்தியால்பேட்டையில் இருந்து ராஜகுலம் வரை புறவழிச்சாலை அமைந்துள்ளது. இச்சாலையை ஒட்டி உள்ள களியனூர்  கிராமத்தின் அருகில், குறுகிய வளைவு பகுதி உள்ளது. இப்பகுதியில் இரவு  நேரங்களில் செல்லும் பைக், கார், லாரி, பஸ் உள்பட பல்வேறு வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கின. இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இந்த சாலை வளைவு பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம்   நெடுஞ்சாலைத்துறை  சார்பில் அகலப்படுத்தப்பட்டது. ஆனாலும், பாலத்தின் மீது செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்காமல் இருக்க இருபுறமும் தடுப்புகளை அமைக்காமல், ஒருபுறம் மட்டுமே  அமைத்தனர். இதனால், இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும்  வாகனங்கள்,  தரைப்பாலத்தின் அருகில் உள்ள வயல்வெளிகளில் கவிழ்ந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது.

இதனை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து, தரைப்பாலத்தின் அருகே உள்ள வயல்வெளி பகுதியில் தடுப்புகள் அமைக்க வேண்டும். சாலை வளைவு இருப்பதை, பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டி வாகன ஓட்டிகளுக்கு  எச்சரிக்கை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதனை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: