மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி சானிடைசர் இயந்திரம்

சென்னை:சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் மின்தூக்கிகள், கழிவறைகள் உள்ளிட்டவைகளில் கால்களால் இயக்கும் வகையில் அமைப்புகளை நிர்வாகம் மாற்றியுள்ளது. இதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு சிறிய அளவிலான பாட்டில்கள் மூலம் சானிடைசர் வழங்கப்பட்டு வந்தது. எனவே, இந்த நடைமுறைக்கு மாற்றாக தானியங்கி இயந்திரங்களை நிறுவ மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்நுழையும் பகுதி, வெளியேறும் பகுதி, மெட்ரோ ரயில் பெட்டிகள் என பல்வேறு இடங்களில் தானியங்கி சானிடைசர் இயந்திரம் நிறுவும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தானியங்கி சானிடைசர் இயந்திரங்கள் பொருத்தப்படுகிறது.

Related Stories: