தேவகோட்டை தாலுகாவில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசம்: விவசாயிகள் கவலை

தேவகோட்டை: பருவம் தவறி பெய்த மழையால் தேவகோட்டை தாலுகாவில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. பருவம் தவறி பெய்து வரும் மழையால் நெற்கதிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. ெநற்கதிர்கள் முளைத்து வீணாகி வருகின்றன. வாழைத்தோப்பில் நாள் கணக்கில் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாழைமரங்கள் அழுகி வருகின்றன.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேவகோட்டை ஒன்றியத்திலுள்ள முப்பையூர், கழுவன்காடு, மேக்காரைக்குடி, வெட்டிவயல், கடையனேந்தல், வாயவானேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்கதிர்கள், வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று மற்ற விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: