மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்  ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று மீஞ்சூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. செயல் தலைவர் நிலவழகன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் வாசுகி நிலவழகன், முதன்மை கூடுதல் செயல் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பாலன், இணைச் செயலாளர் மாலதி சரவணன், பொருளாளர் பூஷனம் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகளுக்கான பொருட்கள் வாங்கியதற்கான பணம் ஒதுக்கீடு செய்யவில்லை. மாநில நிதிக் குழுவின் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. 14.15 திட்டக்குழு நிதி ஒதுக்கியும் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் ஓராண்டு ஆகியும் ஊராட்சி பணிகள் சரிவர நடக்கவில்லை. அதனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் கோரிக்கை மனு கொடுக்கப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயலூர் கோபி, வெங்கடகிருஷ்ணன். சசிகுமார். இலக்கியா கண்ணதாசன். உமா மங்கை, வனிதாராஜேஷ், சதாசிவம். கலாவதி. உஷா. மஞ்சுளா. செல்வி, பவானி, கங்கை அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: