திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் முதல்வர் அதிமுக மீது புகார்கள் உள்ளன: ஆ.ராசா பேட்டி

சென்னை: திமுக துணை ெபாதுச்செயலாளர் ஆ.ராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது என்.ஆர்.இளங்கோ எம்.பி உடனிருந்தார். பின்னர் ஆ.ராசா நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிபந்தனைகள் விதித்து உச்ச நீதிமன்றத்தில் பெற்றுள்ள தடை ஆணையை விளக்கிக்கொண்டு விவாதம் நடத்த தயாரா என்று கேட்டதற்கு முதல்வரிடம் இருந்து பதில் இல்லை. அமைச்சர் வேலுமணி மீது கொடுக்கப்பட்ட வழக்கிற்கு 214 பேரிடம் விசாரணை செய்து ஆதாரம் இல்லை என்று முடித்து வைத்தனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறவில்லை. கவர்னர், லஞ்ச அதிமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.

ஊழலுக்கு பெயர் போன கட்சி அதிமுக தான், ஆதாரமற்ற ஊழல் புகார்கள் கூறுவதை முதல்வர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் வழக்கு தொடரப்படும். ஊழல் புகார்கள் குறித்து முதல்வர் விவாதம் நடத்த தயங்குவது ஏன்? மேலும் திமுகவினர் 58 பேர் சொத்து சம்பாதித்ததாக கூறுகிறீர்கள், முடிந்தால் எப்.ஐ.ஆர் போடுங்கள். இல்லையென்றால் பேசாமல் இருக்க வேண்டும். திமுக மீது எந்த  ஊழல் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் நாங்கள் அதிமுக மீது கொடுத்த ஊழல் குற்றச்சாட்டுக்கு முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை தப்ப விட்டுள்ளனர். வேண்டுமென்றே உண்மை குற்றவாளிகளை தப்பவிட்டு விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: