நா.மூ.சுங்கம் பாலாற்றில் புதர்களைஅகற்ற வலியுறுத்தல்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியை நாமூ.சுங்கம் வழியாக செல்லும் பாலாற்றில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக ஆங்காங்கே தடுப்பணைகளும் கட்டப்பட்டிருந்தது. தற்போது பாலாற்றின் பல இடங்களில் பெரிய அளவிலான மரங்கள், செடிக்கொடிகள் முளைத்து புதர்கள் சூழ்ந்த இடமாக மாறியுள்ளது. மேலும், பல இடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டி செல்வது தொடர்ந்துள்ளது. இந்த பாலாற்றில் ஆங்காங்கே காடுபோல் சூழ்ந்துள்ள புதர்களை முறையாக அப்புறப்படுத்தாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றாமலும் போனதால், மழைக்காலங்களில் வரும் தண்ணீர் முறையாக வழிந்தோட வழியில்லாமல் உள்ளது.

மேலும் பாலாற்றில் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்ட தடுப்பணைகளை பராமரிக்காமல் கிடப்பில் போட்டதால், மழைக்காலத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உண்டாகிறது.எனவே, பாலாற்றில் தண்ணீர் செல்லும் இடம் தெரியாதவாறு உள்ள புதர்,  ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: