காஞ்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை, திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையம், சின்ன காஞ்புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மதுரமங்கலம் அரசு சமுதாய சுகாதார நிலையம், மீனாட்சி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகை நேற்று நடந்தது.இதையொட்டி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், நடந்த தடுப்பூசி ஒத்திகையை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. கோவிட் 19 தடுப்பூசி போடும் ஒத்திகைகள் முறையே காத்திருப்போர் பிரிவு, கோவிட் 19 தகவல் சேகரிப்பு பிரிவு, தடுப்பூசி போடும் பிரிவு, கண்காணிப்பு அறை என்ற முறையில் தடுப்பூசி போடப்பட்டு தகவல் அனைத்தும் சேகரிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்ட அனைவரும் அரை மணி நேரம் கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படுவர்.

மேலும், கோவிட் 19 தடுப்பூசி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படும். இதில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

அப்போது காஞ்சிபுரம் இணை இயக்குநா (சுகாதாரப் பணிகள்) ஜீவா, மருத்துவ கண்காணிப்பாளர் கல்பனா உள்பட பலர் இருந்தனர்

Related Stories: