கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து விவாதமா?: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி ஆலோசனை.!!!

டெல்லி: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இன்ஸ்ட்டிடியூட் தயாரித்து வருகிறது. கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரும் 13-ம் தேதியில் இருந்து இதற்கிடையே, நாடு முழுதும், கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 11--ம் தேதி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொரோனா தளர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: