தடுப்பு சுவர் சேதமடைந்து உயிர்பலி வாங்க காத்திருக்கும் கிணறு

நெல்லை: நெல்லை அருகே உள்ள தாழையூத்து சங்கர்நகர் பகுதியில் 110 அடி ஆழம் கொண்ட கிணறு தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நெல்லை அருகே உள்ள தாழையூத்து சங்கர் நகர் பேருராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 1வது தெருவில் 60 வீடுகள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 110 அடி ஆழம் உள்ள கிணறு உள்ளது.

அப்பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது அதிகளவு தண்ணீர் காணப்படுகிறது. இந்த கிணற்றை சுற்றிலும் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் கால்நடைகள் மேய்ச்சலுக்காகவும் இப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும் கிணற்றின் சுற்றுச் சுவர் சேமடைந்துள்ளது. இப்பகுதியில் சிறுவர்கள் அதிகளவு விளையாடி வருகின்றனர். ஆகவே பொதுமக்கள், கால்நடைகள் பாதுகாப்பு கருதி கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவும், கிணற்றின் மேல் பகுதியில் கம்பிவலை கொண்டு மூடி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: