ஞாயிற்றுக்கிழமைகளில் புறநகர் சிறப்பு ரயில்களின் சேவை 401 ஆக அதிகரிப்பு: நாளை மறுநாள் முதல் அமல்.!!!

சென்னை: வருகின்ற 10.01.2021 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களின் சேவை எண்ணிக்கை 401 அதிகரிக்கப்படுகிறது.  இது தொடர்பாக சென்னை கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் 401 புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும். இந்த புதிய கால அட்டவணை வரும் ஞாயிற்றுக்கிழமை (10.01.2021) முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி,சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கம் 147 சேவைகள், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கம் இடையே 66 சேவைகள், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம் 136 சேவைகள், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் 52 சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 401 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அத்துடன்,  ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே அனைத்து தேசிய விடுமுறை நாட்களிலும் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: