பறவைக்காய்ச்சல் எதிரொலி: இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சி இறக்குமதிக்கு நேபாளம் இடைக்காலத் தடை.!!!

காத்மாண்டு: இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாள அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது. கேரளாவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகளுக்கு H5N8 வைரஸ்  பாதிப்பால் பறவைக் காய்ச்சல் இருந்ததை அடுத்து, 40 ஆயிரம் கோழிகள் மற்றும் வாத்துக்கள் உயிருடன் புதைக்கப்பட்டன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் 10 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்தன. அரியானா,  இமாச்சல பிரதேசம் மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வலசை வந்த பறவைகளால் இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து அனைத்து  வகையான கோழிப் பொருட்களையும் இறக்குமதி செய்வதை நேபாள அரசு நிறுத்தியுள்ளது. இந்தத் தடை வியாழக்கிழமை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேபாள விவசாய மற்றும் கால்நடை மேம்பாட்டு அமைச்சகம் தனது அனைத்து அலுவலகங்களுக்கும் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து உள்ளூர் அலுவலகங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சோதனைச் சாவடிகள்  விழிப்புடன் இருக்கவும் கோழிப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நேபாளம்-இந்தியா எல்லைக்கு அருகில் கோழிப் பொருட்களின் திறந்த வர்த்தகத்தை நிறுத்துமாறு உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தியது.

நேபாளத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த அவசர நேரத்தில் அனைத்து வர்த்தக பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை சரிபார்க்க மிகவும் கடினம், ஏனென்றால் நாடுகள் நீண்ட திறந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன, மேலும் எல்லைப் பகுதிகளில் நடக்கும் முறைகேடுகளைச் சரிபார்க்க அதிகாரிகளை நியமிக்க முடியாது என்றார்.

Related Stories: