எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த மார்த்தாண்டத்தை சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஜிகாதி தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு பிப்ரவரி 1ம் தேதி என்ஐஏக்கு மாற்றப்பட்டது.  இதையடுத்து கடந்த ஜூலை மாதம் அப்துல்சமீம், தவுபீக், காஜா மைதீன், மகபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாபர் அலி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிகாபுதீன் என்ற சிராஜூதீனை தேடி வந்தனர். அவர் வெளிநாட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோருக்கு துப்பாக்கியை ஏற்பாடு செய்து கொடுத்ததில் சிகாபுதீன்  பங்கு முக்கியமானதாக என்ஐஏ கருதியது. இந்தநிலையில் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கத்தாரில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய  சிகாபுதீனை (39) என்ஐஏ கைது செய்தது. இவரது சொந்த ஊர் கோவை ஆகும்.

Related Stories: