ஏரிகளில் பறவைகளை கண்காணிக்க ஏற்பாடு: வனத்துறை உதவி இயக்குனர் உத்தரவு

மைசூரு: பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சலால் மைசூரு வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் உள்ள பறவைகளை கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட வனத்துறை உதவி இயக்குனர் பிரசாந்த் குமார் தெரிவித்தார். மைசூருவில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வனத்துறை உதவி இயக்குனர் பிரசாந்த் குமார் கூறுகையில், ``கடந்த சில தினங்களுக்கு முன் மைசூருவில் இரண்டு பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இந்த பறவைகளை பெங்களூருவில் பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை நடத்தியதில் பறவை காய்ச்சலால் இறக்கவில்லை என்று தெரியவந்தது. இருந்தாலும் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் வசிக்கும் பறவை இனங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பறவைகளை தொட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கும், வனத்துறை ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

Related Stories: