பள்ளிகளை உடனே திறக்க வேண்டும்: அரசுக்கு தனியார் பள்ளிகள் கோரிக்கை

சென்னை: பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் பள்ளிகளில் 25 கோடி மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அதில் தனியார் பள்ளிகளில் 12.5 கோடி பேர் படிக்கின்றனர். அரசு ஆரம்பப் பள்ளிகளில் 2.38 கோடி படிக்கின்றனர். நர்சரி பிரைமரி பள்ளிகளில் 2.11 கோடி பேர் படிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

உடல் நலப்பிரச்னை, பொருளாதார பிரச்னை, கல்வி பிரச்னைகள், கற்றல் பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில் 3 ஆயிரம் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க முடியவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. வாகனங்களுக்கும் வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர கட்டாய கல்வி உரிமைச்ச ட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு கட்டணமும் தனியார் பள்ளிகளுக்கு வந்து சேர வில்லை. இதனால் பள்ளிகளை நிர்வாகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகளை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: