எந்த மருத்துவ சட்டப்பிரிவின் அடிப்படையில் அவசர கால தடுப்பூசிக்கு ஒப்புதல்?.. ஒப்புதலுக்கான நிபந்தனைகள் குறித்த தரவுகள் எங்கே?.. நிபுணர்கள் கேள்வி

டெல்லி: இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோவாக்சின், மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து மருத்துவ நிபுணர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இங்கிலாந்தின் கோவிஷீல்டு தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கும் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் நேற்று அனுமதி அளித்தது.

ஆனால் இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கான பரிசோதனை இன்னும் 3-வது கட்டத்தில் உள்ள நிலையில் எந்த அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச பயோ எத்திகல் சங்கத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட இந்தியாவின் 7 முக்கிய மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 110% நம்பகமானது என்று தரக்கட்டுப்பாட்டு ஆணையர் கூறுவது அந்த அறிவியலின் அடிப்படையில் என்றும் பல மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  செய்தியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் கேள்விகளுக்கு வாய்ப்பளிக்காமல் கோவாக்சின் தடுப்பூசிக்கு அறிக்கை மூலம் அனுமதி அளித்தது ஏன் என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எந்த மருத்துவ சட்டப்பிரிவின் அடிப்படையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அவர்களின் கேள்வியாகும் தடுப்பூசி ஒப்புதலுக்கான நிபந்தனைகள் குறித்த தரவுகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 3-ம் கட்ட பரிசோதனைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தன்னார்வலர்களை நியமிக்க திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் தடுப்பூசிக்கு எப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது மருத்துவர்கள் பலரின் கேள்வி ஆகும்

Related Stories: