இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியிருக்கும் டெல்லி அரசைப் பாராட்டுகிறேன்: வைரமுத்து ட்விட்

சென்னை: இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியிருக்கும் டெல்லி அரசைப் பாராட்டுகிறேன் என கவிஞர் வைரமுத்து பாராட்டி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ்சிசோடியா இருவர்க்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன். தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடிக்குத் தலைவணங்குகிறேன் என கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா தலைமையிலான கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகளுக்கான அமைச்சகம் இன்று தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியைப் பரப்புவதற்காக புதிய கல்விக் கூட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த கல்விக் கூட்டத்தின் துணைத் தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் டெல்லி கவுன்சிலருமான ராஜாவை நியமித்துள்ளனர். இந்தக் கல்விக் கூடத்துக்கு விரைவில் இடம் ஒதுக்கப்படும். மேலும், கூடுதல் கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்படும் எனவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த துணை முதல்வர் மணிஷ் சிஷ்சோடியா, டெல்லி கலாச்சார ரீதியாக உயர்நிலையில் உள்ள நகரம். டெல்லியில் நாட்டின் எல்லா பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள். பணி செய்கிறார்கள். இந்த பன்முகத்தன்மைதான் டெல்லியை உயிர்ப்புடன் வைத்துள்ளது. பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. டெல்லியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், தமிழ்நாட்டின் கலாச்சாரம் கலைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கவேண்டும். ராஜா போன்ற குறிப்பிடத்தக்கவர்கள் எங்களுடன் கரம்கோர்த்து இதில் இணைந்து பணியாற்ற வந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கும், அதில் சிறப்பாக பணி செய்தவர்களைப் பாராட்டுவதற்கும் நிறைய விருதுகள் வழங்குவதற்கு இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த கல்விக் கூடம் மூலம் தமிழ் மொழி படிப்புகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்க்கு நன்றி கூறும் விதமாக கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: