தமிழக கோயில்களில் 18ம் தேதி முதல் அனைத்து விழாக்களையும் நடத்தலாம்: அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கோயில்களில் 18ம் தேதி முதல் விழாக்கள் உட்பட நிகழ்ச்சி நடத்த அறநிலையத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதி முதல் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அர்ச்சகர்கள் மூலம் சன்னதிகளில் பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு  ஊராட்சிகளில் உள்ள கோயில்களிலும், தொடர்ந்து பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ள கோயில்கள் என படிப்படியாக கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வரை கோயில்களில் இரவு 8 மணிக்கு மேல் நடை சாத்தப்படுகிறது.  

இந்த நிலையில் கோயில்களில் வழக்கமான நடைமுறையை பின்பற்றி திருவிழா, நிகழ்ச்சிகள் நடத்தவும், வழக்கமான நேர நடைமுறை வழிபாட்டு தலங்களில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் வரும் ஜனவரி 18ம் தேதி முதல் அனைத்து கோயில்களிலும் வழக்கமான நேரத்தில் நடைமுறை மற்றும் வழக்கமான திருவிழாக்கள் உட்பட எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ளலாம். இதன் மூலம்  அனைத்து கோயில்களிலும், உபயதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாக பங்களிப்புடன் விழாக்கள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது. இதற்காக, வேறு யாரிடம் சிறப்பு அனுமதி பெற தேவையில்லை.

Related Stories: