திருக்கழுக்குன்றம் அருகே பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பை: அமைச்சர் வழங்கினார்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியில்  தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ்  தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.ஆறுமுகம், திருக்கழுக்குன்றம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் வீ.வேலாயுதம், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன், கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் லோகநாதன், செங்கல்பட்டு சரக துணை பதிவாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கலந்து கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது.தமிழக மக்கள், பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, அரசு சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பை வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டு கொரோனா, புயல்,  கனமழையால் ஒட்டு மொத்த தமிழகமும் பாதித்துள்ளது.

இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனை கருதில் கொண்டு, தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்ளுக்கும் தலா 2500, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் கூடிய ஒரு நல்ல துணிப்பையில் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதனை, குடும்ப அட்டைதாரர்கள், பெற்று கொள்ளலாம் என்றார். முன்னாள் எம்பி மரகதம் குமரவேல், முன்னாள் எம்எல்ஏ தனபால், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்     எஸ்வந்த் ராவ், மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் ஆனூர் பக்தவச்சலம், திருக்கழுக்குன்றம் கூட்டுறவு சங்க செயலாளர் சிவகாமி, சங்க துணை தலைவர் திருநாவுக்கரசு, சங்க இயக்குனர்கள் ஜி.கே.பாபு, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: