14 ஆயிரம் கோயில்களில் பணியாற்றுவோருக்கு மாத ஊதியம் இல்லை மின் கட்டணம் செலுத்த கூட வசதி இல்லாத கிராம கோயில்கள்: திருப்பணி நிதியில் ஜிஎஸ்டி வசூல்: கோயில் பூசாரிகள் நலச்சங்கம் முதல்வருக்கு கடிதம்

சென்னை:  கோயில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் முதல்வர் எடப்பாடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

* அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் இல்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டும், பூசாரிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாங்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அறநிலையத்துறை ஆண்டுதோறும் அர்ச்சகர், பட்டாச்சாரியர், குருக்கள் போன்றோருக்கு மட்டும் பயிற்சி வழங்கி வந்தது. இது போன்று பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பூசாரிகளுக்கு பயற்சி முகாம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை இதுவரை செயல்படுத்தவில்லை.

* பூசாரிகளுக்கு அரசு நிலத்திலோ, கோயில் நிலத்திலோ குடியிருக்க 3 சென்ட் நிலம் ஒதுக்கி தர வேண்டும்.

* ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் உள்ள கிராம கோயில்களில் மின் கட்டணம் செலுத்த கூட வசதி இல்லாமல் உள்ளனர். இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்.

* பெரிய கோயிலில் இருந்து வரும் உபரி நிதியில் இருந்து கிராமப்புற திருப்பணிநிதி ₹1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், மத்திய, மாநில அரசுகள் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்கின்றன. இந்த பணிக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

*  பூசாரி மறைவுக்கு பின் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வே்ணடும் வேண்டும்.

* 60 வயத்திற்கு மேல் 30 ஆயிரத்துக்கு மேல் பூசாரிகள் உள்ளனர். ஆனால், 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. ஒரு பூசாரி மறைந்தால் தான் மற்றொரு பூசாரி ஓய்வூதியம் பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் 15 ஆயிரம் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நிதி ஒதுக்க வேண்டும்.

* ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மக்கள் பகுதியில் அமைந்துள்ள கிராம கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: