புத்தாண்டு விடுமுறை எதிரொலிகளை கட்டிய சுற்றுலா தலங்கள்

ஊட்டி: புத்தாண்டு விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஆங்கில புத்தாண்டு தினம் நேற்று உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் புத்தாண்டை கொண்டாடுவதற்காக முந்தைய தினமே ஊட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் வழக்கமாக புத்தாண்டு நள்ளிரவில் நடக்கும் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் ஓட்டல் அறைகளிலயே முடங்கினர். தொடர்ந்து புத்தாண்டு தினமான நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர துவங்கினர். ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

 இச்சூழலில் வெயிலுடன் கூடிய இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். குறிப்பாக உள்ளூர் மக்களின் கூட்டம் சுற்றுலா தளங்களில் காணப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் இருந்து படகு சவாாி செய்ய சுற்றுலா பயணிகள் ஆா்வம் காட்டியதால், கூட்டம் அலைமோதியது. இதேபோல் தொட்டபெட்டா, பைக்காரா, கேர்ன்ஹில் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனிடையே புத்தாண்டு தினத்தன்று இளைஞர்கள் அதிவேகமாக பைக் ஓட்டுவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு மையம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: