ஆங்கில புத்தாண்டுக்கு மத்திய ரயில்வே பரிசு: புதுப்பிக்கப்பட்ட ஐஆர்சிடிசி வலைதளத்தை தொடங்கி வைத்தார் மத்தியமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி: ஐஆர்சிடிசி-யின் புதுப்பிக்கப்பட்ட வலைதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின்  சேவைகளை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் ரயில்வே அமைச்சகம் மூலம் எடுத்து வருகிறது. இதற்கிடையே, டிசம்பர் 25-ம் தேதி ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மிக எளிமையானதாக, அனைத்து வசதிகளையும் கொண்டதாக  இருக்கவேண்டும் என்று இ-டிக்கெட் முறை மேம்படுத்தப்படுவதை மதிப்பாய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, இணையதள சேவைகள் மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் பியூஷ் கோயலிடம் உறுதி அளித்தனர். தொடர்ந்து,ஆங்கிலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஐஆர்சிடிசி  வலைதளம் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சியின் புதுப்பிக்கப்பட்ட வலைதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். புதுப்பிக்கப்பட்ட இந்த வலைதளம் பயன்படுத்துவதற்கு எளிமையாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஐ.ஆர்.சி.டி.சி செயலியும் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வலைதளம் ரயில்வே பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் புக் செய்ய எளிதாக உள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related Stories: