சென்னை: சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியாகும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரங்கால் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10, 11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுத் தேர்வு ஆன்லைனில் நடக்காது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.