கமல்ஹாசன் தனக்கு வராததை விட்டுவிட வேண்டும்.. நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆக முடியாது : அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை :மதுரை வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மூலம் தண்ணீர் தேக்கி, மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது  தண்ணீர் தெப்பக்குளம் முழுவதும் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் வசதிக்காக படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தில் சவாரிக்கு படகு விடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக படகு சவாரியை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் மதுரையின் மெரினாவாக மாறியுள்ளது. தமிழகத்தில் திராவிட இயக்கங்களை மட்டுமே தமிழக மக்கள் ஏற்று கொள்வார்கள்.ரஜினி ஆழமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர் என்பதால் அழகான முடிவு எடுத்து இருக்கிறார். ரஜினி தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுத்துள்ளார்.திரைத்துறையில் பல்வேறு சேவைகள் புரிந்த கமல், சினிமாவில் மாற்றத்தை உருவாக்கலாம். அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. கமல்ஹாசன் தனக்கு வராததை விட்டுவிட வேண்டும். நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆக முடியாது. எம்ஜிஆர் மடியில் இருந்தவர்கள் எல்லோரும், அவரது வாரிசாகவும் முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: