தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் ஐக்கியம்.!!!

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் சிவராமகிருஷ்ணன் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும், 15 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கடந்த 1987-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவின் பென்சன் மற்றும் ஹெட்ஜஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் வெற்றியின் ஹீரோ சிவராமகிருஷ்ணன் 20 ஆண்டுகளாக வர்ணனையாளராக இருந்து வருகிறார். மேலும் ஐ.சி.சி.யின் கிரிக்கெட் கமிட்டியின் ஒரு பகுதியாக இருப்பதைத் தவிர தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்பின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமாக கமலாயத்தில் தமிழக பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் முன்னிலையில் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் தன்னை இணைந்து கொண்டார். பாஜகவில் இணைந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், தேசம் முன்னேற வேண்டுமானால், நாட்டை சரியான திசையில் கொண்டு செல்ல பிரதமர் நரேந்திர மோடியைப் போன்ற ஒருவர் எங்களுக்குத் தேவை என்று கூறினார்.

Related Stories: