மேலவை துணை தலைவர் தற்கொலை விவகாரம்: கடிதத்தில் உள்ள தகவலை பகிரங்கப்படுத்த முடியாது: முதல்வர் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: மேலவை துணை தலைவர் தற்கொலை விவகாரத்தில் கடிதத்தில் உள்ள தகவலை பகிரங்கப்படுத்த முடியாது என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, தர்மேகவுடா தற்கொலை செய்து கொள்வதற்கு முன், இம்முடிவு எடுப்பதற்கான காரணத்தை விவரமாக கடிதம் மூலம் எழுதி வைத்துள்ளார். இதில் அவரது குடும்பத்தில் உள்ளவர்களில் யார் யாருக்கு எவ்வளவு சொத்து பங்கிட்டு கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் உள்ளது. இன்னும் பல  தகவல்களும் டெத்நோட்டில் இடம் பெற்றுள்ளது. அதை பகிரங்கப்படுத்த முடியாது என்றார்.

தற்கொலைக்கான காரணம் விசாரிக்கப்படும்-பொம்மை இது குறித்து அவர் கூறும்போது, தற்கொலைக்கு முன் தர்மேகவுடா எழுதி வைத்துள்ள டெத்நோட்டை உள்ளூர் போலீசார் எடுத்து வைத்துள்ளனர். அதில் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அதை பரிசீலனை செய்தபின், அடுத்த கட்ட நவடிக்ைக எடுக்க முடியும். சமீபத்தில் நடந்த பல சம்பவங்கள் அவரது மனதை வெகுவாக பாதித்துள்ளது. டிரைவரிடம் சொல்லாமல் சென்றுள்ளார். அவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் கண்டறியப்படும் என்றார்.

கடைசி பேச்சு: சிக்கமகளூரு நகரில் உள்ள நூற்றாண்டு விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்ட்டுள்ள மல்டி ஜிம்மை திறந்து வைத்து அவர் பேசும்போது, விளையாட்டு துறையில் இருக்கும் வீரர்கள் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும் என்ற இளைய சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சில மணி நேரத்தில் தற்கொலை முடிவை எடுத்து விட்டார்.

டெத்நோட்டில் என்ன உள்ளது ?

தர்மேகவுடா எழுதியுள்ளதாக கூறப்படும் டெத்நோட்டில், அவரது மகன் சோனாலுக்கு எழுதியுள்ளதின் மகனே.. எல்லோரையும் நன்றாக கவனித்து கொள். வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நான் மனம் நொந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை மன்னியுங்கள் என்று எழுதியுள்ளதாக தெரியவருகிறது.

உண்மை தெரிய விசாரணை வேண்டும்-குமாரசாமி

தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.  அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. ஆகவே உண்மை நிலை தெரிய வேண்டுமானால் உரிய விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

அதிர்ச்சி அளிக்கிறது-சித்தராமையா

தர்மேகவுடா மரண தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றவன். கூட்டுறவு துறையின் மேம்பாட்டிற்காக அவர் எடுத்த முயற்சி காலத்தால் மறக்க முடியாது. மேலவை துணைதலைவராக இருந்து அவர் ஆற்றிய பணியை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவரது ஆத்மா இளைப்பார இறைவனை வேண்டுவதுடன் அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன் என்றார்.

தற்கொலை செய்த இடத்தில் கார்: தர்மேகவுடா தனியாக காரை ஓட்டி சென்று தண்டவாளம் அருகில் காரை நிறுத்தி விட்டு தற்கொலை செய்து கொண்டார். மொபைல் டவர் லொகேஷன் மூலம் போலீசார் தேடி சென்றபோது, முதலில் அவரது கருப்பு வண்ண சான்ட்ரோ காரை பார்த்தபின், தண்டவாளத்தில் பல துண்டுகளாக சிதறி கிடந்த உடல்களை பார்த்தனர்.

Related Stories: