மினி கிளினிக் மூலம் சென்னையில் 6,000 பேர் பயன்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை: சென்னையில் அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் மூலம் 6,000 பேர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல்  தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, ‘‘ சென்னையில் தற்போது வரை அம்மா கிளினிக் மூலம் 6,000 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். அனைத்து வார்டுகளிலும் அம்மா மினி கிளினிக் விரைந்து துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம், சாலைப் பணிகள், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

Related Stories: