வேகக்கட்டுப்பாட்டு கருவி இருந்தால் ரினிவல் செய்ய காலாவதி சான்று தேவையில்லை: போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை: போக்குவரத்து வாகனங்களில் தயாரிப்பு நிறுவனத்தால் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்தவாகனத்தை புதுப்பிக்கும் ேபாது, காலாவதி சான்று தேவையில்லை என தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து போக்குவரத்துத்துறை கமிஷனர் தென்காசி ஜவஹர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: போக்குவரத்துத்துறையின் வாகன் இணையதளத்தில் எந்த வாகனத்திற்கு எந்த வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும் என்ற தரவுகளின் அடிப்படையில் தேசிய தகவல் ஆணையம் (என்ஐசி) ஏற்கனவே இணைய அடிப்படையிலான வழிமுறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.  இந்த போர்ட்டல் அனைத்து வேகக்கட்டுப்பாட்டு கருவி உற்பத்தியாளர்களுக்கும் கிடைக்கப்பெறும். ஒருவேளை போக்குவரத்து வாகனங்களில் ஏற்கனவே இக்கருவி பொருத்தப்பட்டிருந்தால், வாகன புதுப்பித்தலின்போது காலாவதி சான்று தேவையில்லை.

இதேபோல் வாகனத்தை தயாரிக்கும் போது, உற்பத்தியாளரால் வேககட்டுப்பட்டு கருவி வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மீண்டும் பொருத்தப்பட்டதற்கான சான்றுகுறித்து வலியுறுத்த தேவையில்லை. வாகன பரிசோதனையின் போது அனைத்து ஆய்வு அதிகாரிகளும் கண்டிப்பாக, இதை பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: