இது தற்காலிக முடிவுதான்: பிரிட்டன் விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்படலாம்...மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் பேட்டி.!!!

டெல்லி: பிரிட்டன் விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்படலாம் என மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இந்தாண்டு தொடக்கத்தில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைப்போன்று இந்தியாவிலும் ஊரடங்குஅமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது படிப்படியாக  தளர்த்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த கொரோனா வைரசுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உட்பட பல்வேறுநாடுகள் ஈடுபட்டு வருகிறது. இதில்,சில தடுப்பூசிகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் அவசர காலபயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் மரபுமாற்றம் அடைந்த புதுவகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த அந்தநாட்டில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளது.இதேபோன்று,இந்தியாவிலும் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வரும் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய  விமான போக்குவரத்துதுறை அமைச்சர்ஹர்திப் சிங் புரி, பிரிட்டனுக்கானவிமானபோக்குவரத்திற்கான தடை டிசம்பர் 31-ம் தேதிக்கு பின்னரும்  நீட்டிக்கப்படலாம். இந்த தடை தற்காலிகமானது தான். இதுநீண்டகாலத்திற்கோஅல்லது காலவரையின்றியோ நீடிக்காது என்றும் தெரிவித்தார்.

Related Stories: