பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா; தனி அறையில் சிகிச்சை: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மட்டும் உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என கூறினார். உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர் சென்னை கிண்டி கிங்ஸ் ஆராயிச்சி இன்ஸ்டிட்யூட்டில் அனுமதிக்கப்பட்டு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

உருமாறிய கொரோனா நபருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்தார். புனே ஆய்வகத்தக்கு அனுப்பி நடத்தப்பட்ட மாதிரி பரிசேதனையில் உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது என கூறினார். பிரிட்டனில் இருந்து வந்த 30 பேரின் மாதிரியை புனே ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம் என கூறினார். மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என பேட்டியில் தெரிவித்தார். மேலும் அவர்களை கண்காணிக்க தனிகுழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Stories: